• காவிரி: அரசியலும் வரலாறும்-Cauvery: Arasiyalum Varalarum
இரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு!சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை.இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன்? தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது? இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை?ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல். எம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.‘மொழிப்போர்’, ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ வரிசையில் ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காவிரி: அரசியலும் வரலாறும்-Cauvery: Arasiyalum Varalarum

  • ₹225


Tags: , ஆர். முத்துக்குமார், காவிரி:, அரசியலும், வரலாறும்-Cauvery:, Arasiyalum, Varalarum