கவிதை ஏதோ ஒரு அனுபவத்தைப் பிரதிபலிப்பதோ, காலங்காலமான  அனுபவங்களை முட்டிமோதிச் சொல்லி முடிப்பதற்கான எத்தனிப்போ அல்ல; மாறாக, அதுவே ஓர் அனுபவத்தை அல்லது புலன் மெய்ப்பை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறும் ரமேஷ்-பிரேமின் புதிய கவிதைகள் இவை. கதை கூறலின் நீட்சியையும் மிகைபுனைவின் விநோதங்களையும் தொன்மங்களின் அழிவற்ற நினைவுகளையும் புலனறிதலின் எல்லைகளை மீறி நழுவிச் செல்லும் உடலின் தாபங்களையும்  தன்னிச்சையான மன இயக்கத்தின் ரகசிய நகர்வுகளையும் பற்றிய பதிவுகளைத் தமது அடிப்படைக் கூறுகளாகக் கொண்டுள்ளன இக்கவிதைகள். மொழிதலின் மாறுபட்ட சாத்தியங்களைப் பற்றிய பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கும்  இக்கவிதைகளின் பல வரிகள் தங்கள் பங்களிப்பாகச் சில புதிய நிறங்களையும் வாசனைகளையும் தமிழ்க் கவிதையின் மைய ஓட்டத்திற்குள்  கொண்டுவந்து சேர்ப்பவையாக  அமைகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Chakkaravaalak Khottam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹100


Tags: Chakkaravaalak Khottam, 100, காலச்சுவடு, பதிப்பகம்,