• சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு.

அர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற, தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது. அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றி பேசுகிற இந்நூல் அரசனின் கடமைகள், பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள்வரை விவரிக்கறது, சட்டம்,நீதி,குற்றம், தண்டனை என்ற பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்தசாஸ்திரம்.

ஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான். அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

  • ₹460


Tags: chanakkiyarin, artha, sasthiram, சாணக்கியரின், அர்த்த, சாஸ்திரம், அழகர் நம்பி, Sixthsense, Publications