நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசியசின் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சீன மக்களில் கோடிக்கணக்கானோர் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டனர்.இவருக்கு நன்றி செலுத்தும் நிமித்தமாகத்தான் சீன மக்கள் இவரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி, இவர் பெயரால் மதமொன்றையும் நிறுவி 2500 ஆண்டுகாலமாகக் கட்டிக்காத்து வருகிறார்கள்.மனித உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர் கன்பூசியஸ். கணவன்&மனைவி, தந்தை&மகன், அண்ணன்&தம்பி, அரசன்&குடிமக்கள், நண்பர்கள் என்ற இந்த ஐந்து உறவுகளின் தன்மை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர் அளித்த விளக்கங்களால்தான் கூட்டுக்குடும்ப முறையானது இன்றுவரையிலும் சீனாவில் சிதறாமல் இருக்கிறது.2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கன்பூசியசின் சீன தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியது இந்நூல். அவருடைய சிந்தனைகளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடினார்கள் அன்றைய சீன மக்கள். ஆனால் மன்னர்களால் அவர் அடைந்த அவமானங்கள் அதிகம்.
சீன ஞானி கன்ஃப்யூஸியஸ்
- Brand: வேணு ஸ்ரீநிவாசன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹377
Tags: cheena, gnaani, confucious, சீன, ஞானி, கன்ஃப்யூஸியஸ், வேணு ஸ்ரீநிவாசன், வானவில், புத்தகாலயம்