"சர்வ வல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மை நாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன் சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம் காலமாகத் தொடரும் இந்தப் பொதுஜன பிம்பத்தை ஆதாரபூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார். அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகிய துறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலாவல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம்பாதிக்கப்பட்டவேளையில்தயங்காமல்மரணத்தைத்தழுவியஇரும்புப்பெண்மணி.
ஜூலியஸ்ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான்எனஎஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திர நாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப் பாய்ச்சல்நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்."
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி
- Brand: எஸ்.எல்.வி.மூர்த்தி
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹288
Tags: cleopatra, கிளியோபாட்ரா:, இரும்புப், பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, Sixthsense, Publications