18, சாரதாம்பாள் தெருவில் என்னோடு தங்கிருந்த நண்பர்கள்
அனைவரும் என்னுடைய தொடர்பில் உள்ளனர். இப்போதும்
என் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். மணிபாரதி
என்னுடைய பல படங்களின் கதை விவாதத்திலும்
இருந்துள்ளார். ஹரி போன்ற வேறு இயக்குனர்களின் கதை
விவாதத்திலும் இருந்துள்ளார். ஆனால் ஒரு இயக்குனரின்
கதையைப் பற்றி சிறு பதிவை கூட மற்றொரு இயக்குனரிடம்
கூறியதில்லை. இந்த நேர்மையால்தான் அவரைப் பலர் கதை
விவாதங்களுக்கு அழைக்கின்றனர்.
இயக்குநர் N. லிங்குசாமி
இவரது சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குமுதம், ராணி, கல்கி போன்ற வார இதழ்களில்
வந்துகொண்டே இருக்கும். நெருக்கடியான காலங்களிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.
அதனாலேயே எனக்கு படம் கிடைத்தது என்று அவர் முன்னுரையில் கூறியது உண்மை. அந்த
ஈடுபாடு இருப்பவர்களால் மட்டுமே இந்த சினிமாவில் இயங்க முடியும். சீரியல் இயக்குவது
,கதை விவாதம் செல்வது என்று எப்போதும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டே இருப்பார்,
வேலை செய்யாமல் இதுவரை நான் அவரைப் பார்த்ததில்லை. இதுவே அவருக்கு இப்போது
கிடைத்துள்ள பட வாய்ப்பை பெற்றுத் தந்தாக நான் கருதுகிறேன்.
இந்த சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். புத்தகமாக
தகுதியான அனைத்து விஷயங்களும் இதில் இருக்கின்றன.
நகல் எடுப்பது வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவி
செய்யாது என்ற கருத்தை “அடையாளம்” சிறுகதையில்
எதார்த்தமாக எழுதி இருக்கிறார். வெற்றிக்கான
அடிப்படைச் சூத்திரம் இது. அதே போல ”மாண்பு” மற்றும்
“டீச்சர் செய்த தவறு” ஆகிய கதைகள் என் மனதைக்
கவர்ந்தன.
Tags: color, tajmahal, கலர், தாஜ்மஹால், மணிபாரதி, வானவில், புத்தகாலயம்