நம் வாழ்க்கை முறையில் விதி என்பதன் பொருள் என்ன? எது நிலையானது? எது மாறக் கூடியது? நம் விதியை நாம் எவ்வாறு வடிவமைப்பது? இந்தக் கேள்விகள், உலகின் தலைசிறந்த தத்துவ மேதைகள் சிலரால் தொன்றுதொட்டு கேட்கப்படுகின்றன. புதிய அடித்தளத்தை அமைக்கும் இப்புத்தகத்தில், தாஜி அவர்கள் இதுபோன்ற கேள்விகளுக்கு எளிமையான தீர்வுகளையும், நடைமுறைக்கு உகந்த விவேகத்தையும் கொண்டு பதிலளிக்கிறார். ‘த ஹார்ட்ஃபுல்னெஸ் வே’ என்ற அவரது புத்தகத்தையடுத்து, நம் வாழ்க்கை முறையை பண்படுத்திக் கொள்ளவும், மறுமை எனப்படும் பிற்கால வாழ்வின் விதி உட்பட, நமது விதியை வடிவமைக்கவும் ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என நம்மை வழிநடத்தி, இப்பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறார். உணர்வுறுநிலையை பற்றியும், பரிணாம வளர்ச்சியின் பங்கையும் விவரிக்கும் அவர், பிறப்பும் இறப்பும் ஏற்படும் நேரத்தில் நமக்கு என்ன நிகழ்கிறது எனவும் - மேலும் ஜீவிதமே மாற்றப்படுகின்ற மிக முக்கியமான இந்த தருணங்களில் நாம் எவ்வாறு செயல்படலாம் என்பதை விளக்குகிறார்.
நாம் நம்மீதே நம்பிக்கை கொள்ளவும், எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான வழியை கண்டறியவும், மிகக் கடினமான சூழ்நிலையைக்கூட முன்னேறுவதற்கான வாய்ப்பாக காண்பதற்கும் தாஜி அவர்கள் நமக்கு தூண்டுதலளிக்கிறார். சில எளிமையான பயிற்சிமுறைகள், இதயம் நிறைந்த ஆர்வம் மற்றும் விரிவடைந்த உணர்வுறுநிலை, இவற்றின் மூலமாக நாம் அனைவரும் நமது உள்ளார்ந்த ஆற்றலையும், இப்பிறவில் அடைய வேண்டிய இலக்கையும் கண்டறிய முடியும் என வலியுறுத்துகிறார்.
Designing Destiny: The Heartfulness Way
- Brand: Kamlesh D. Patel
- Product Code: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- Availability: In Stock
-
₹399
Tags: designing, destiny, the, heartfulness, way, Designing, Destiny:, The, Heartfulness, Way, Kamlesh D. Patel, மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்