• தேவ மருந்து
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்றைப் பற்றியும் இந்த நூல் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஆயுர்வேதத்தினால் எந்தெந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், எவ்வளவு நாட்கள் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, சில நோய்களுக்கு (அறுவை சிகிச்சைகள் மூலம்) ஆங்கில மருத்துவம் சிறந்தது என்பதையும் தயக்கமின்றி இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வாத&பித்த&கபத்தின் ஏற்றத்தாழ்வுகளே நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அடிப்படை என்பதையும், நவீன மருத்துவத்தில் இவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை பெரிதும் அச்சுறுத்தும் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், சுவாசம் சம்பந்தமான நோய்களுக்குரிய ஆயுர்வேத மருத்துவத்தையும், வருமுன் காக்கும் ஆலோசனைகளையும் இந்நூலாசிரியர் தெளிவாகக் கொடுத்துள்ளார். உடலை ரணமாக்காமல் எளிய முறையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக உள்ள ஆயுர்வேத மருத்துவத்தை தெளிவாகவும், உதாரணங்களோடும் உணர்த்தும் பயனுள்ள நூல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தேவ மருந்து

  • ₹90
  • ₹77


Tags: deva, marunthu, தேவ, மருந்து, டாக்டர்.எல். மஹாதேவன், விகடன், பிரசுரம்