கூடு தான் வீடு, கூடிக்களிக்க
சேர்ந்திருக்கும் சொந்தம் பிரிய விழையாது
பிரிந்து விடாது, பிரச்சினையென்று ஒன்று வரும் வரை.
பிரச்சினை எதுவாயினும்
பேசித்தீர்க்க முடியாது போகாது,
போனால் திரும்பாது,
தேவைகள் தீர்க்கப்படலாம், தாமதமாகலாம்,
ரத்த தானம் கூட இங்கு தேவை தான்,
ஆனால் ஆசைகள்...
அர்த்தமுள்ள ஆசைகள் அங்கீகரிக்கப்படும் பொழுது
செயல்படுத்த வசதியும் வாய்ப்பும் இல்லாத பொழுது
விம்முவதுவும் வேண்டுவதுவும் தீராத பிரச்சினை.
சுருக்கி வாழ்ந்தால் சொர்க்கம் உங்கள் கையில்
சுருங்க சுருங்க பேசுவதும் பேணுவதுவும்
நடைமுறையில் நிச்சயம் சாத்தியம்.
படிக்க வசதியில்லை என்பது ஓரளவு தேவை
வரையறை தாண்டினால் அது ஆசை.
எது முடியுமோ அது தான் சாத்தியம்
தேவைக்குள் சுருக்கினால் வாழ்க்கை இனிக்கும்
தேவை நீளுமானால் வருத்தம் தான்.
தகுதி என்பது வரையறுக்கப்பட்டது
திறமை என்பது தகுதியை உயர்த்துவது
தகுதிக்கேற்றபடி திறமை இருக்கும், இல்லையெனில்
திறன் தேடும் பயணம் பாதியில் நிற்கும்.
கல்விக்கடன் என்பதெல்லாம் கைகொடுக்காது
பட்டயப்படிப்பு பாங்குடன் முடிப்பவர்க்கே
கடன் கழிவது கஷ்டமாகி விடும்
சரியான முடிவெடுக்காத குடும்பங்களில்
படிப்பும் கடனும் திரிசங்கு சொர்க்கமே.
ஒவ்வொரு குடும்பமும் ஆலமரமானால் அழகு தான்
ஆனால் நாம் காணும் குடும்பங்கள் இன்று
பிரச்சினைகளில் சிக்கித்திணறுவது
ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலையால்.
தேவைகள் ஆசைகள்-Devathaigal Aasaigal
- Brand: ருத்ரன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹95
Tags: devathaigal, aasaigal, தேவைகள், ஆசைகள்-Devathaigal, Aasaigal, ருத்ரன், கவிதா, வெளியீடு