• தேவி தரிசனம்
புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான், திருவரங்குளம் எனும் வனத்துக்கு வேட்டையாடச் சென்றார்.  அங்கே, திகம்பர்ராக அமர்ந்திருந்தார் ஒரு மகான்.  அவரது கண்களில் ஒளி மின்னியது.  முகத்தில் தேஜஸ் நிரம்பியிருந்தது.  அவரைக் கண்டதும், மன்னர் நமஸ்கரித்தார். மௌனமாக, கைதூக்கி ஆசீர்வதித்த சுவாமிகள், மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மூலமந்திரத்தை எழுதினார்.  மன்னரிடம் அதை வாசிக்கும்படி சைகை செய்தார்.  பின்னர், அந்த் மணலை கையில் அள்ளி, மன்னரிடம் கொடுத்து, ஆசிர்வாதித்தார்.  மன்னருக்கு அருள்புரிந்த அந்த மகான், நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் சுவாமிகள்! அன்றிரவு, மன்னரின் கனவில் வந்த ஸ்ரீபிரகதாம்பளா, 'குருவைச் சந்தித்து, அவருடைய உபதேசத்தைப் பெற்றதால்,நீயும், உனது சந்ததியும், உனது தேசமும் மேலும் மேலும் செழிக்கப் போகிறது' என்றாள்.  ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அனைவரும் தரிசிக்க வழி செய்தார்.  பக்தர்களுக்கு மணலையே பிரசாதமாகத் தந்தார். இன்றளவும்,புதுகை ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலயத்தில், மணல் பிரசாதம் வழங்குகின்றனர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தேவி தரிசனம்

  • ₹95
  • ₹81


Tags: devi, tharisanam, தேவி, தரிசனம், வி. ராம்ஜி, விகடன், பிரசுரம்