கலைஞர்கள் வறியவர்கள். செல்வம் சேர்ப்பதில் தோற்றுப் போனவர்கள். கலை விலை போகாது. நிஜமான கலை என்றால் அது வணிகத்திற்கு எதிரானது என்பது போன்ற கற்பிதங்கள் இங்கு புழக்கத்தில் உள்ளவை. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதிலும்.
தான் மடிந்து கலையை வாழவைத்த கலைஞர்களை காவியப்படுத்தி இருக்கிறோம். தோல்வியில் சுகம் கண்டிருக்கிறோம். ஒரு masochistic pleasure-ல் திளைக்கிறோம்.
சில நேரங்களில் அது எல்லை மீறி, வணிக வெற்றி பெற்றதாலேயே சில கலைஞர்களை உதாசீனப்படுத்தியும் இருக்கிறோம். பணம் பண்ணுபவன் எப்படி கலைஞன் ஆக முடியும்? ‘புரிகிற மாதிரி எழுதினால் அதை எப்படி சிறந்த இலக்கியம் என்று ஒப்புக்கொள்வது’ என்பது போல இது!ஆனால் கலைஞனாகவும் இயங்கி செல்வமும் சேர்க்க முடியும் என்பதை பலர் நிரூபித்தும் அதை ஒப்புக்கொள்வதில் சிக்கல் உள்ளது. கலையை விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை செய்யணும் என்றாலே உடனே நாலாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் கொட்டும்: அதுல பணம் பண்ண முடியாது. பிராக்டிகலா யோசி. இது வாழ்க்கைக்கு உதவாது. லட்சியம் எல்லாம் பேச நல்லா இருக்கும். முதல்ல செட்டிலாக ஒரு வேலையை பிடிச்சிக்கோ. இதெல்லாம் எல்லாம் முடிஞ்ச பிறகு வெச்சுக்கோ.கலை என்று இல்லை. மனதுக்கு பிடித்த எந்த வேலையும் (ஓ! அது தான் கலையோ?) ஆசைப்பட்டு செய்து, செல்வம் சேர்த்து சந்தோஷமாய் வாழலாம் என்கிறார் ஜேம்ஸ் ஆலன்
தியானங்கள் ஜேம்ஸ் ஆலன் - Dhiyanangajames Aalan
- Brand: வசந்தராம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹120
-
₹102
Tags: dhiyanangajames, aalan, தியானங்கள், ஜேம்ஸ், ஆலன், -, Dhiyanangajames, Aalan, வசந்தராம், கண்ணதாசன், பதிப்பகம்