சிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும். இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது. கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால, த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல இது. தெளா என்றதொரு தேசத்தின் சாபத்தைப் போக்குவதற்கான பெட்டகத்தைத் தேடி சிறுவர்களின் சாகசப்பயணத்தை விறுவிறுப்[புடன் கொடுத்திருக்கும் விதத்தில் நவீன யுகச்சிறுவர்கள் மத்தியிலும் கொண்டாடப்படுவார் வா.மு.கோமு. சிறுவர் இலக்கியமும் கை கூடி வருமா?என்கிற பரிட்சித்துப் பார்த்தலின் வெற்றியே இந்நாவல்.
Tags: durdura, டுர்டுரா, -, Durdura, வா.மு.கோமு, டிஸ்கவரி, புக், பேலஸ்