உலகத்தையே சிரிக்க வைத்த ஒப்பற்ற கலைஞனான சால்லி சாப்ளினின் வாழ்க்கை எவ்வளவு துயரம் நிரம்பியது என்பதை விவரிக்கிறது இந்நூல். 1889 ஏப்ரல் 16 ஆம் நாள் சார்லி சாப்ளின் பிறந்ததில் தொடங்கி நாடகக் கலைஞர்களாக இருந்த அவருடைய பெற்றோரின் வறுமை நிறைந்த வாழ்க்கை, பணத் தேவைக்காக சிறுவன் சார்லி பார்த்த பல்வேறு வேலைகள், தந்தையின் மரணம், தாயின் மனநிலை பாதிப்பு, நாடகத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு, பார்வையாளர்களின் அமோக ஆதரவு, ஒரு கட்டத்தில் பார்வையாளர்களைக் கவர முடியாமல் அவமானமடைந்தது, திரைப்பட வாய்ப்பு, சொந்த நிறுவனம் தொடங்கி திரைப்படம் தயாரித்தது, புகழின் உச்சிக்குப் போனது, மகாத்மா காந்தி, நேரு, வின்ஸ்டன் சர்ச்சில், குருஷேவ், சூ என் லாய் போன்ற தலைவர்களைச் சந்தித்தது உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் கால வரிசைப்படி சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நடிகை மேரி டோரா, குருஷேவ் போன்றவர்களுடனான சாப்ளினின் சந்திப்பும் "மஸ்யோ வர்தா' படச் சிறப்புக் காட்சியின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு சம்பவமும் மிகவும் சுவையானவை.
சார்லி சாப்ளின் வெளியிட்ட "மை லைஃப் இன் பிக்சர்ஸ்', "மை ஆட்டோகிராபி' ஆகிய புத்தகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட புத்தகத்தைச் சுருக்கி தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் சிவன். ஓர் உன்னதக் கலைஞனின் ஒளிவுமறைவற்ற வாழ்க்கைப் பதிவு.
எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்-Eanathu Vazkai Charlie Chaplin
- Brand: சிவன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹270
Tags: eanathu, vazkai, charlie, chaplin, எனது, வாழ்க்கை, சார்லி, சாப்ளின்-Eanathu, Vazkai, Charlie, Chaplin, சிவன், கவிதா, வெளியீடு