விழிகளுக்கு விளங்காமல் இமை இமைக்கையில், தரையினைப் பார்த்த கயிலன் அதிர்ச்சிக்குள்ளானான்.
துரோணரின் பாதத்தின் அருகே குருதி தெறித்து ஒரு கட்டைவிரல் துண்டாகக் கிடந்தது. அந்த விரல் கிடக்கும் இடத்திலிருந்து ஏகலைவன் நிற்கும் இடம்வரை குருதி சொட்டுச்சொட்டாகவும் பல துளிகளாகச் சேர்ந்தும் தேங்கியும் கிடந்தது.
கயிலன், மெல்ல ஏகலைவனது பாதத்திலிருந்து அவனை நோக்கியபோது அவனது வலது கையிலிருந்து குருதி சொட்டிக்கொண்டிருந்தது.
Tags: egalaivan, ஏகலைவன், -, Egalaivan, நா.கௌசிகன், டிஸ்கவரி, புக், பேலஸ்