"நாமும் ஒரு சொந்த வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும்... அப்படி ஆரம்பித்தாலும் அதில் சிக்கலோ நஷ்டமோ இருக்கக்கூடாது என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சொந்தமாகத் தொழில் செய்யும் எல்லோருமே தாங்கள் நினைத்ததைப் பெறுகிறார்களா என்பது சந்தேகமே. சொந்தத் தொழில் செய்தவர்கள் பலர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில்தான் நஷ்டமோ சிக்கலோ ஏற்படாத சொந்த வியாபாரம் ஒன்று இன்றைக்கு உலகம் முழுவதும் வேகமாய்ப் பரவி வருகிறது. இதில் ஈடுபட நம்மால் முடியக்கூடிய முதலீடு இருந்தால் போதும். சொந்தத் தொழில் செய்ய விருப்பப்படும் எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம்தான் பல நிலை வர்த்தகம்.- MLM- Multi Level Marketing. இது ஏட்டுச் சுரைக்காய் அல்ல.அனுபவங்களின் தொகுப்பு.
நீங்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று உல்லாசமாக சிறகடித்துப் பறக்க இந்தப் புத்தகம் வழிகாட்டும் என நூலின் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. `கனவே கலையாதே' முதல் `முடிவல்ல ஆரம்பம்' என்ற 16 அத்தியாயங்களும் வியாபாரத்தில் முன்னேற வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. வெற்றி பெற 25 வழிகள் கேள்வி - பதில் வடிவத்தில் அளிக்கப்பட்டுள்ளது பயனுள்ளது. நல்ல ஒரு வியாபார முன்னேற்றம் வழிகாட்டி நூல்."
எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் - Ellorukkum Ettra Vyabaram
- Brand: து.சா.ப. செல்வம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: ellorukkum, ettra, vyabaram, எல்லோருக்கும், ஏற்ற, வியாபாரம், -, Ellorukkum, Ettra, Vyabaram, து.சா.ப. செல்வம், கண்ணதாசன், பதிப்பகம்