விஜய் ராணிமைந்தனின் இரண்டாவது படைப்பு இந்நூல். சிறந்த மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் பதிவு செளிணிவதில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு அதிகம். அரசியலை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டு பயணப்படுபவர். சமுதாயம்தான் இவருக்கு சாந்திநேகிதன்.
நான் வெறுமனே ஒரு விஞ்ஞானியோ, பொறியியல் நிபுணனோ அல்ல. போராளியாகப் பிறந்தவன். இந்த நூலை நீங்கள் படிக்கும்போது நம் நாட்டையும், நம் உலகத்தையும் சூழ்ந்துள்ள தற்போதைய பிரச்சனைகளை குறித்து விமர்சனப் பூர்வமாக உங்களுக்குச் சிந்திக்கத் தோன்றும் என்றே நான் நம்புகிறேன். ஒரு கண்டுபிடிப்பாளரின், பிரச்சனைகளைத் தீர்ப்பவரின்கடுமையாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒருவரின், கண்ணோட்டத்தில் உங்களின் அந்தச் சிந்தனை அமையக்கூடும்.
- சிவா அய்யாதுரை
சிவா அளிணியாதுரையின் வாழ்க்கை வரலாற்றை, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து, உள்வாங்கி அதை சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார், விஜய் ராணிமைந்தன். அவரின் முயற்சி பாராட்டத்தக்கது. இந்நூலைப் படிக்கும்போது சிவா அய்யாதுரை என்ற தமிழரின் பல்வேறு பரிமாணங்கள் நம்மைப் பெருமைப்பட வைக்கின்றன.
- முனைவர் கைலாசவடிவு சிவன்தலைவர், இஸ்ரோ
இந்தியாவில் தென் தமிழகத்தில் ஒரு குக்கிராமத்திற்குச் சொந்தக்காரரான சிவா, இமெயில் என்னும் செளிணிதிப் புரட்சிக்கு உருக் கொடுத்து இமயம் தொட்டது தமிழர் அனைவரையும் இறுமாப்பு கொள்ள வைக்கின்ற இனிப்புச் செய்தி. இந்த நூலில் இவர் பற்றிய அனைத்துத் தகவல்களும் அள்ளஅள்ளக் குறையாது சொல்லப்பட்டிருக்கிறது.
- உ.. சகாயம், இ.ஆ.ப.,
துணைத் தலைவர், அறிவியல் நகரம்
இமெயில் தமிழன் சிவா அய்யாதுரை
- Brand: விஜய் ராணிமைந்தன்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹120
Tags: email, thamizhan, இமெயில், தமிழன், சிவா, அய்யாதுரை, விஜய் ராணிமைந்தன், Sixthsense, Publications