• எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம்-Emergency: JPyin Jail Vaasam
1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிரிட்டனிடம் பெற்ற சுதந்தரத்தை இந்தியா, இந்திரா காந்தியிடம் இழந்தது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. மனித உரிமைகள் சட்டப்படி மீறப்பட்டன. இந்தியாவின் வரலாற்றில் இருண்ட பாகமாக இன்று வரை நீடிக்கிறது அந்தக் காலகட்டம்.இந்தியாவின் முதன்மை எதிரியாக அடையாளம் காணப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண், மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சண்டிகரில் சிறைவைக்கப்பட்டார். சிறையில் ஜேபி கழித்த அந்த ஆறு மாதங்களில், இந்தியா முற்றிலுமாக மாறிப்போனது. ஜேபியும் மாறித்தான் போனார். இரண்டாவது மகாத்மாவாக.இந்தியாவுக்கு இன்னொரு சுதந்தரப் போர் தேவை என்பதை உணர்ந்த ஜேபி, ஃபாசிஸத்துக்கு எதிரான மாபெரும் ஜனநாயகப் போரை பிரகடனம் செய்தார். ஜேபிக்கும் இந்திரா காந்திக்குமான போர். நீதிக்கும் அநீதிக்குமான போர். எதேச்சாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போர். அடிமைத்தனத்துக்கும் சுதந்தர வேட்கைக்குமான போர்.இந்தப் புத்தகம் நெருக்கடி நிலையையும் ஜேபியின் போராட்டத்தையும் கண்முன் நிறுத்துகிறது.நூலாசிரியர் எம்.ஜி. தேவசகாயம், மாவட்ட ஆட்சியராகவும், மேஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியவர். ஜேபி சிறைவைக்கப்பட்டபோது அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. ஜேபியோடுநெருங்கிப் பழகிய அந்தத் தருணங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாதவை என்கிறார் தேவசகாயம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம்-Emergency: JPyin Jail Vaasam

  • Brand: M.G. Devasahayam
  • Product Code: கிழக்கு பதிப்பகம்
  • Availability:
  • ₹320


Tags: , M.G. Devasahayam, எமர்ஜென்ஸி, :, ஜே.பி.யின், ஜெயில், வாசம்-Emergency:, JPyin, Jail, Vaasam