மிகக் குறைவாகவே விவரித்து வாசகரை வெகு ஆழமாக யோசிக்க வைக்கும் படைப்பு இந்நூல். படைப்பின் கருப்பொருளுக்கும் படைப்பாளியின் மனநிலைக்கும் தோதான குழப்பமான மொழி நடையில் வாசகரைச் சிக்கெனப் பிடிக்கும் புதினம் இது. மனம் என்னும் பூதக் கண்ணாடியால் கூர்ந்து நோக்கினால் மட்டுமே போரினால் விளையும் அபத்தங்களையும் அவலங்களையும் அவதானிக்க இயலும் என்பதை உணர வைக்கும் நூல் இது.தானே யுத்தத்தில் படைவீரனாக இணைந்து, போர்க் கைதியாகப் பிடிபட்டு, விடுவிக்கப்பட்டு, பின் சராசரி மனிதனின் பார்வையில், யுத்தத்தின் போக்கையும் மக்களின் செயல்பாடுகளையும் மன ஓட்டங்களையும் தனக்கே உரிய தனித்துவமான யதார்த்த எள்ளலுடன் லூயிஸ் பால் பூன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளரின் புகைப்படக் கருவிபோல் வேறுபட்ட மனிதர்களைப் படம்பிடித்து தனது செறிவான எழுத்து நடையால் அப்படங்களின் எல்லைகளைப் பன்மடங்கு பெருக்கி ஆழமும் விரிவுமான பரிமாணங்களை வாசக மனத்துக்குக் காட்சிப்படுத்துகிறார். மனிதநேயமும் தார்மீக ஆவேசமும் மனித மன விநோதங்கள் மீதான நையாண்டியும் இவரது எழுத்தின் பலம். One of the leading lights of postwar Flemish literature, Boon launched his variegated literary career with this wispy meditation on wartime calamities of the soul. Set in Belgium shortly after the Allies drove out the Nazis, this novel contains little plot to speak of; rather, it consists of a series of vignettes profiling a few dozen quasi-anonymous characters (many referred to as simply what’s-his-name), everyday people whose lives have been made absurd and uncomfortable, if not outright miserable, by the war. The lens at the center of these sketches is a writer, also named Louis, whose profound dismay at the futility and waste of war exists alongside an evident discomfort in trying to write about such things. The result is wryly cynical prose that enforces certain distances: between Louis and the characters he profiles, and between Louis and readers. Though strongly echoing another Louis (Louis-Ferdinand Céline), this novel also anticipates some of Boon’s later modernist experiments.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Enathu siriya Yutham

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹125


Tags: Enathu siriya Yutham, 125, காலச்சுவடு, பதிப்பகம்,