பாரம்பரியமான கவியரங்குகள் மலினப்பட்டுப் போன சூழலில் அதற்கு ஒரு மாற்றாகவும் ஒரு பரிசோதனை முயற்சியாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கவிதா நிகழ்வை நான் அறிமுகப்படுத்தினேன். ‘அரசியல் கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ என்ற தலைப்பில் முதலாவது கவிதா நிகழ்வு 1981இல் சுமார் முப்பதுபேர் கொண்ட ஒரு சபையில் அரங்கேறியது. அவ்வகையில் உருவான மிகப் பிரபலமான வடக்கில் கிராமங்கள் தோறும் அறுபது தடவைகளுக்குமேல் அரங்கேற்றப்பட்ட ‘எங்கள் மண்ணும் இந்தநாட்களும்’ என்ற கவிதா நிகழ்வின் எழுத்துப் பிரதி சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அச்சுருவில் வெளிவருகின்றது. மிகக் கரிசனையுடன் இப்பிரதியைத் தேடி எடுத்து அருமையான விரிவான ஒரு முன்னுரையுடன் நண்பர் பா. அகிலன் இதைப் பதிப்பித்துள்ளார். கவிதாநிகழ்வு என்றால் என்ன என்பதை அறியாத பலருக்கும் அதுபற்றி இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது. கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஒரு சிறந்த சாதனமாகக் கவிதா நிகழ்வைப் பயன்படுத்துவதற்கும் இந்நூல் ஆதர்சமாக அமையும் என்று நம்புகின்றேன். எம். ஏ. நுஃமான்
Engal Mannum Intha Natkalum
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: Engal Mannum Intha Natkalum, 90, காலச்சுவடு, பதிப்பகம்,