கேலண்டர்களில், கடைகளில், பொது இடங்களில், வாகனங்களில், செல்போன் வாட்சாப் மெசேஜ்களில், மக்களின் மணிபர்ஸ்களில் என்று எல்லா இடங்களிலும் சாய்பாபாவின் படங்களைப் பார்க்க முடிகிறது.
இந்தியாவிலும், இந்தியர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் பாபா கோயில்கள் புதிது புதிதாக உதித்துக் கொண்டே இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 50,000 பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஷீரடிக்கு வருகிறார்கள். அவர் நிறுவிய துவாரகமாயி தர்காவில் அவர் வளர்த்த துனி, உதியின் மகிமைகள் பற்றிய கதைகளைப் புத்தகமாகவும், ஒலிச்சித்திரங்களாகவும் செவி வழி கதைகளாகவும், கேட்டு,பாடி, பகிர்ந்து பரவசமடைகிறார்கள்.
வாழும் காலத்தில் மத நல்லிணக்கத்தைப் போகுமிடமெல்லாம் மலரச் செய்தவரான பாபா இன்றைய நவநாகரிக யுகத்தின் பொருள்முதல்வாதத்தின் பக்கவிளைவுகளை முன்கூட்டியே கணித்தவர். எளிமையான வாழ்க்கைமுறைக்கு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தவர், ஜீவா காருண்யத்தை பறை சாற்றியவர், பல இடங்களுக்குப் பயணப்பட்டவர்.
அவர் ஜீவசமாதியடைந்து ஒரு நூற்றாண்டைக் கடந்து இன்றைய கணினி யுகத்திலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் கர்த்தாவாகக் கருதப்படுவது ஏன்? பொருளாதாரப் பின்புலம், படிப்பு, மதம் சார்ந்த நம்பிக்கை போன்ற பல்வேறு வித்தியாசன்களைக் கடந்து இவ்வளவு பெரிய ஜனத்திரளை அவர்பால் ஈர்க்கும் விசை எது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் பிரயாசையில் சோம வள்ளியப்பன்- மேலான் கலைப் பயிற்றுநர், பங்குச் சந்தை ஆலோசகர் போன்ற தன தொழில்முறை அடையாளங்களை கழற்றி வைத்துவிட்டு, ஒரு பக்தனாகத் தன அனுபவங்களையும், தான் கண்டு, கேட்டு, பார்த்த விஷயங்களை சிறுசிறு கதைகளாக இங்கே பதிவு செய்துள்ளார்.
Tags: engumiruppavar, எங்குமிருப்பவர், சோம வள்ளியப்பன், வானவில், புத்தகாலயம்