பிரபஞ்சத்தின் அபூர்வ கிரகமான பூமிக்குக் கடைசியாக வந்து சேர்ந்த உயிர் மனிதன். அவனே அதன் கடைசி மூச்சுக்கும் காரணமாக இருப்பானோ என்ற அச்சம் இன்று மேலோங்கியிருக்கிறது. எல்லையற்ற வனப்புகளோடும். வாழ்வின் அமுதமான நீரோடும். வளம் நிறைந்த மண்ணோடும், உயிரின் ஊற்றான காற்றோடும் நமக்குத் தரப்பட்ட இந்த உலகம் நஞ்சு உமிழ்கிற நரகமாகி விடும் என்ற அச்சம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. தன்னைத்தானே அழித்துக் கொள்கிற ஆயிரக்கணக்கான போர்களை நிகழ்த்தி, இரண்டு உலக யுத்தங்களில் சீரழிந்து, அணுவைப் பிளந்து அதன் ராட்சத சக்தியால் குலை நடுங்க வைத்து பேரழிவுப் பாதையில் மனிதன் பயணிக்கத் தொடங்கிய பின்னரும் எங்கேயோ ஒரு மூலையில் நம்பிக்கைத் தளிர் இருக்கத்தான் செய்தது.
என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்)-Enmagaje
- Brand: சிற்பி பாலசுப்பிரமணியம்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: enmagaje, என்மகஜெ, (மலையாளச், சூழலியல், நாவல்)-Enmagaje, சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதா, வெளியீடு