ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும்?நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக்கக் கிடைப்பதில்லை. அவை எழுதப்படுவதே இல்லை என்பதுதான் காரணம்.இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். இரா.முருகன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஏழு குறுநாவல்கள் முதல் முறையாக இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கணையாழி, குமுதம்,புதிய பார்வை, முன்றில் ஆகிய இதழ்களில் வெளிவந்து கவனத்தையும் கருத்தையும் ஈர்த்த படைப்புகள் இவை.சுகமான ஒரு வாசிப்பனுபவத்தை உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எளிய மொழியில் இயல்பாக விரிந்துசெல்லும் அதே சமயம், மறக்கமுடியாத ஓர் இலக்கிய படைப்பாகவும் இன்னொரு தளத்தில் உயர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் அபூர்வமாகவே இங்கே நிகழ்கின்றன. அதனாலேயே இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.
இரா.முருகன் குறுநாவல்கள்-Era.Murukan Kurunovelgal
- Brand: இரா. முருகன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹250
Tags: , இரா. முருகன், இரா.முருகன், குறுநாவல்கள்-Era.Murukan, Kurunovelgal