மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.
Tags: , ஜெயமோகன், எரிமலர்-Erimalar