திரைப்படங்களைப் பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் எழுதப்பட்டுள்ள ரதனின் இந்த நூல் பிற சினிமா கட்டுரைத் தொகுப்புகளிருந்து வேறுபட்டது. சினிமாவின் அழகியலையோ தொழில்நுட்பத்தையோ வியந்து பேசும் நூல் அல்ல என்பதே அந்த வேற்றுமை. காட்சிகளின் எதிர்கோணத்தில் உண்மைகளைத் தேடுகிறது இந்த நூல்.
நவீன யுகத்தின் மானிட நெருக்கடிகளையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சினிமாக்களைப் பற்றியே இந்த நூல் பேசுகிறது.
சினிமாவின் அரசியலே இந்தக் கட்டுரைகளின் மையமும் விரிவும்! நிறம், இனம், மதம், மொழி ஆகியவற்றால் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் யுத்தங்களையும் பேசு பொருளாகக் கொண்டு அவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தும் திரைப்படங்களை நூலின் கட்டுரைகள் அலசுகின்றன. ஈழம் முதல் தென் அமெரிக்க நாடுகள் வரையான எல்லா நாடுகளின் படங்களையும் தமிழ், சிங்களம் முதல் துருக்கி உட்பட சகல கலாச்சாரப் பின்னணி கொண்ட சினிமாக்களையும் விரிவாகவும் தீவிரமாகவும் பார்க்கிறது இந்த நூல்.
Etir Cinimaa
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: Etir Cinimaa, 120, காலச்சுவடு, பதிப்பகம்,