எட்டு நாட்கள் மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகிவிட்டது. அவனைச் சுட்டேரிக்க, மாற்ற முடியாத தண்டனை -வேறு வழக்காடி நீதி கேட்கும் இடமும் கிடையாது. -இன்று 10-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் ஒன்பதாம் நாள் -எட்டு நாட்கள் உள்ளன தண்டனை நிறைவேற்றப்பட்ட அவன் விரும்பினால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம், ஐயனே அடி பணிகிறேன் அஞ்ஞானத்தால் நான் உளறி வந்தேன் இது நாள் வரையில் மெய்ஞ்ஞான போதகரே என் பிழை பொறுத்திடுக என் பிழை பொறுத்திடுக '' என்று சொன்னால் போதும், தண்டனை இல்லை. சாவு இல்லை. வாழலாம். எட்டே நாட்கள் உள்ளன அவன் ஒரு முடிவுக்கு வர. வாழ்வா? சாவா? என்ற முடிவு -அவனே இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எட்டு நாட்கள் - உடன் பிறந்தார் இருவர் - Ettu Naatkal
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: ettu, naatkal, எட்டு, நாட்கள், -, உடன், பிறந்தார், இருவர், , -, Ettu, Naatkal, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்