பெருமதிப்பிற்குரிய பாலகுமாரன் அவர்களுக்கு,
எழில் ஒரு நல்ல நாவல். இப்படியொரு நாவல் எழுதப் போகிறேன் என்று நாலைந்து பேருக்குநடுவே சொல்லிவிட்டு பிறகு எழுதுகின்ற ஒரு சௌகரியம் அல்லது கம்பீரம் உங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எப்படி நாவலை கிடுகிடுவென்று சொன்னீர்களோ அதேவிதமாக நாவலை எழுதியும் இருக்கிறீர்கள். இது த்ரில்லர் நாவல் இல்லை. சமூக நாவல். அதனால் முடிவு தெரிவது, முதலில் ஆரம்பிப்பது என்ற கேள்விகளெல்லாம் எழவேயில்லை.
நாலைக் கேட்டது ஒரு அனுபவம் என்றால் படிப்பது இன்னொரு அனுபவமாக இருக்கிறது.
Tags: ezhil, எழில்-Ezhil, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்