• எழுத்துக்கு எழுபது-Ezhuthukku Ezhupathu
எல்லோரின் குரலையும் சேர்த்து ஒரே ஸ்ருதியில் தனிக்குரலாக கம்பீரமாக எல்லோருக்கும் உரைப்பவனே எழுத்தாளன். இவை அனைத்தும் ஒருமித்திருந்தது எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் எனில் அது மிகையில்லை. அவரின் எழுத்துக்களுக்குள் எல்லோரும் தங்களையே கண்டனர். தவிப்புகளையும், ஏக்கங்களையும், கானகத்தில் திக்குத் தெரியாத அந்தகனாக அலைவதையும் அவரின் எழுத்தில் கண்டனர். ஆனால், ரணத்தின் மீது தடவப்பட்ட களிம்புபோல அவரின் எழுத்துக்கள் எல்லோரையும் ஆற்றுப்படுத்தியது. கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு... இதேதான் நானும். மெல்ல மேலெழுந்தேன். நீயும் வந்துவிடலாம். கொஞ்சம் தலையை சிலுப்பிக்கொள். அவமானத்தை ஏற்கப் பழகு.இன்று உன்னை அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், நாளை நீ அவர்களுக்கு முக்கியமானவன் ஆவாய்.. ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும். அழகான பொருத்தமான பெயர். மார்க்கபந்தீஸ்வரர் என்பது சிவனின் திருப்பெயர். அழகிய தமிழில் வழித்துணைநாதர் என்று சொல்வார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எழுத்துக்கு எழுபது-Ezhuthukku Ezhupathu

  • ₹1,200


Tags: ezhuthukku, ezhupathu, எழுத்துக்கு, எழுபது-Ezhuthukku, Ezhupathu, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்