• Flight Plan
வாழ்வில் பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கும், மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்குமான ஒரு திட்டத்தை வடிவமைப்பது எப்படி என்பதை ஒரு விமானப் பயண உருவகத்தின் மூலம் இந்நூல் விளக்குகிறது. ஒரு விமானப் பயணத்தைப்போல, வெற்றியும், அதிர்ஷ்டத்தையோ, எதிர்பாராத வாய்ப்புகளையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாத சக்திகளையோ சார்ந்த ஒன்றல்ல என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பின்னாலிருந்து அடிக்கின்ற சாதகமான காற்று ஒரு விமானப் பயணத்தை விரைவுபடுத்தலாம்; முகத்திற்கு எதிராக அடிக்கின்ற எதிர்க்காற்று தாமதங்களை உருவாக்கலாம்; ஆனால், ஒரு விமானி, இந்த உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்பியல் விதிகளோடு ஒத்திசைவாகச் செயல்பட்டு, சென்றடையத் திட்டமிட்டுள்ள இடத்தை அடைகின்ற விதத்தில் தன்னுடைய விமானத்தைத் திறமையுடனும் இலகுவாகவும் கையாள்கிறார். வெற்றியும் அதைப் போன்றதுதான். இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகளையும் விதிமுறைகளையும் கற்றுக் கொண்டு அவற்றை நீங்கள் உங்கள் வாழ்வில் திறமையாக நடைமுறைப்படுத்தினால், நீங்கள் கனவு காணும் வாழ்க்கை உங்கள் வசப்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Flight Plan

  • ₹250


Tags: flight, plan, Flight, Plan, Brian Tracy (Author) PSV Kumarasamy (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்