நீரிழிவு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக அளிக்கும் ஆலோசனை, அரிசிக்கு மாற்றாக கோதுமையைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். உண்மையில் அரிசியைக் காட்டிலும் கோதுமையே அபாயமானது.ஆரோக்கியமானது என்று நம்பி நாம் உட்கொண்டுவரும் கோதுமை, சிறிது சிறிதாக நம்மைக் கொல்லும் கொடிய விஷம் என்று பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கிறார் அமெரிக்க இதய சிகிச்சை நிபுணரான நூலாசிரியர் வில்லியம் டேவிஸ்.ரத்தச் சர்க்கரை அளவை கோதுமை அளவுக்கு தாறுமாறாக எகிற வைக்கும் உணவுப் பொருள் வேறில்லை. இதய சிகிச்சை மட்டுமின்றி தோல் வியாதியில் ஆரம்பித்து மன நலப் பிறழ்வுவரை பல்வேறு நோய்களால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய நோயாளிகளை கோதுமையிலிருந்து விடுவித்ததன்மூலம் முழுவதுமாகக் குணப்படுத்தியிருக்கிறார் இவர்.எலும்பு முறிவு, கண் பார்வைக் குறைபாடு என்று தொடங்கி பலவிதமான உபாதைகளுக்குக் காரணம் கோதுமையே என்று எச்சரிக்கிறார் டேவிஸ். கோதுமை தொந்தியை வளர்ப்பதன்மூலம் மேலே சொன்ன அனைத்து நோய்களையும் வளர்க்கிறது. கோதுமைக்கு குட் பை சொல்வதன்மூலம் தொப்பைக்கும் அதன்மூலம் வந்துசேரும் ஏராளமான நோய்களுக்கும் குட் பை சொல்லமுடியும்.Wheat Belly : Lose the Wheat, Lose the Weight, and Find Your Path Back to Health என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்து பெரும் சாதனைகளைப் படைத்த புத்தகம் முதல் முறையாகத் தமிழில்.
குட்பை தொப்பை-Goodbye Thoppai
- Brand: வில்லியம் டேவிஸ் ,MD
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: , வில்லியம் டேவிஸ், MD, குட்பை, தொப்பை-Goodbye, Thoppai