இந்நூலைப் பற்றி ஆசிரியர்:
எவர் எங்கு எழுதினாலும் என் எழுத்து வித்தியாசமானது. ஏனெனில், நான் மல்லாக்கப்படுத்துக்கொண்டோ அல்லது மற்றவர் புத்தகத்தைப் படித்துவிட்டோ எழுதுவதில்லை.
நான் முட்டி மோதி சிக்கித் தவித்து ரத்தம் ஒழுக கிடந்த காலகட்டங்களை மறுபடி மனதில் வரவழைத்து, அந்த யுத்தங்களை மனதில் நிறுத்தி, அதன் வேர்களைக் கண்டுபடித்து, உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இது கதையல்ல, கல்விக் கட்டுரையல்ல, அனுபவசாரம், ஜீவன அமிர்தம், அறிந்ததன் வெளிச்சம். நின்று நிமிர்ந்த விவேகம். அறிந்ததன் வெளிச்சம். நின்று நிமிர்ந்த விவேகம், என்னை ஆளாக்கி நிமிர்த்திய என் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரின் கருணை மழை.
Tags: guru, vazhi, குருவழி-Guru, Vazhi, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்