இனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ்
உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து
கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை
வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில்
இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை கண்டறிகிறார் ரெபேக்கா ஸ்க்லூட்.
அவைகள் ஏறக்குறைய ஒரு குடும்பத்தை அழித்தாலும் ஆயிரக்கணக்கான உயிர்களை
காப்பாற்ற உதவியது. இது மனதை அலைக்கழிக்கின்ற, அழகாக சொல்லப்பட்டுள்ள நூல்.
நீங்கள் வாசிக்கப் போகிற எந்த ஒரு புனைவும் ஏற்படுத்தும் வளமை மற்றும்
கட்டிப்போடும் தன்மைக்கு சற்றும் குறைவில்லாத நூல்.
Tags: henrita, lecs, ஹென்ரிட்டா, லேக்ஸ், சா. சுரேஷ், எதிர், வெளியீடு,