ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து முடித்து அவ்வுலகின் அவசங்களில் இருந்து வெளிவர முற்றிலும் வேறு மனநிலையைத் தரவல்ல ஒரு நூலைத் தேடும்போது ‘ஹிமாலயம்’ வசப்பட்டது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. ஜெயமோகன் ‘கீதா முஹுர்த்தம்’ எனச் சொல்வார். அதுபோல் கவிதைகள் திறந்து கொள்ளவும் சில புத்தங்களை நாம் கையில் எடுக்கவும் உரிய நேரம் இருக்குமோ என்னவோ! புத்தங்களை நாம் வாங்குகிறோம் எனினும் புத்தகங்கள் நம்மைத் தேர்வு செய்கின்றன என்று எண்ணிக் கொள்வது இனிய கற்பனையாக உள்ளது.பயண இலக்கியத்தில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? சூழல் விவரணை- புதிய இடத்தை சொற்களின் வழியாக புலன் நிகர் அனுபவமாக ஆக்குதல் என்பதே முதன்மையான எதிர்பார்ப்பு. குளுகுளுவென இருந்தது, குளிர் வெடவெடத்தது, உடல் நடுங்கியது, மலர்கள் பூத்துக் குலுங்கின, நதி அமைதியாக தவழ்ந்தது, அருவி ஆர்ப்பரித்தது, சூரியன் சுட்டெரித்தது, அழகான அந்தி, அருமையான புலரி என பயண நூலுக்கென நாம் உருவாக்கி வைத்திருக்கும் தேய்வழக்குகளை மீறி அசலான காட்சி அனுபவங்களை அளிக்க வேண்டும். பயண அனுபவத்திற்கும் பயண இலக்கியத்திற்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என சிலவற்றைச் சொல்லலாம். ஆசிரியனின்/ எழுத்தாளனின் தனியாளுமையின் தடத்தைப் பதிவது. அவனுடைய தத்தளிப்புகளை,கேள்விகளை, கண்டடைதல்களை வாசகருக்கு கடத்துவது. சிறந்த பயண இலக்கியம் ஏறத்தாழ நாவலின் வடிவத்தை ஒத்திருக்க வேண்டும். ஒருவகையில் தன்வரலாற்று நாவலின் வடிவத்திற்கு நெருக்கமானது
ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்-Himalayam Sigarangalinude Oru Payanam
- Brand: கே.வி. ஜெயஶ்ரீ
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹300
Tags: himalayam, sigarangalinude, oru, payanam, ஹிமாலயம், சிகரங்களினூடே, ஒரு, பயணம்-Himalayam, Sigarangalinude, Oru, Payanam, கே.வி. ஜெயஶ்ரீ, வம்சி, பதிப்பகம்