• இந்துத்துவ அம்பேத்கர்-Hindutva Ambedkar
சாதி அறவே ஒழிய வேண்டும் என்கிறார் அம்பேத்கர். இந்துத்துவமும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தலித்களின் நலனுக்கு இந்தியா ஒரே வலுவான நாடாக இருந்தாகவேண்டும் என்கிறார் அம்பேத்கர். அனைவரின் நன்மைக்கும் இந்தியா ஒரே வலுவான தேசமாக இருந்தாகவேண்டும் என்கிறது இந்துத்துவம். ஆரிய – திராவிடக் கோட்பாடு முழுவதும் பொய்யானது என்கிறது இந்துத்துவம். அம்பேத்கரும் அதையே சொல்கிறார். தேசிய மொழியாக இந்தியைக் கொண்டுவரவேண்டும் என்கிறது இந்துத்துவம். இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்கிறார் அம்பேத்கர். சம்ஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்படவேண்டும் என்னும் அம்பேத்கரின் கருத்துதான் இந்துத்துவத்தின் கருத்தும்.கம்யூனிஸம் ஓர் அழிவு சக்தி, வன்முறை இயக்கம், நாடு பிடிக்கும் கொள்கை கொண்டது என்பதில் அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் மாற்றுக் கருத்து இல்லை.மதமாற்றம், பௌத்தம், பாகிஸ்தான் பிரிவினை, பொது சிவில் சட்டம், காஷ்மீர் ஆர்டிகிள் 370 என்று அனைத்திலும் இந்துத்துவர்களும் அம்பேத்கரும் ஒன்று போலவே சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்த உண்மைகளை அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்தே அச்சுப் பிசகாமல் மேற்கோள்காட்டி மிகத் தெளிவாக நிரூபிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்துத்துவ அம்பேத்கர்-Hindutva Ambedkar

  • ₹250


Tags: , ம. வெங்கடேசன், இந்துத்துவ, அம்பேத்கர்-Hindutva, Ambedkar