இந்த கதைகளைப் பொறுத்தவரை ஏதோ மனித வர்க்கத்திற்கு செறிவூட்ட வேண்டி மேற்கொண்ட அறிவார்ந்ததொரு முயற்சியன்று. சக மனிதர்கள் செய்கையினாலோ, சைகையினாலோ நங்கூரம் வீச, விளைந்த அதிர்வலைகளை, சலனத்தை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி. இதயத் துடிப்பின் பேச்சு! அவ்வளவே!
மேலும் இப்படைப்புகளை, மனித மனத்தின் நிலைப்பாட்டை - நம்பிக்கை, அவநம்பிக்கை, இப்படிப்பட்ட எதுவுமில்லாதது - அதனையொட்டி நிகழும் அகவெளியின் கொந்தளிப்பிற்கும் புறவெளியின் ஈடுகொடுப்பிற்கும் இடையே ஊசலாடும் மெல்லிய வெளியை கூடுமானவரை அச்சரம் பிசகாமல் பதிவு செய்ய முயன்றதன் விளைவாகவும் கொள்ளலாம்.
இந்த கதைகளின் ஊடான சம்பவங்களை நோக்க, கடந்து வந்தவர்களுக்கு அணுக்கமாகவும், அப்படியல்லாதவர்களுக்கு விலக்கமாகவும் தோன்றலாம். அதற்காக வேண்டி அதன் சாதக பாதகங்களை கணக்கிட்டு ஏற்படுத்திக்கொண்ட முயற்சியுமல்ல இது. அப்படித் தோன்றும் பட்சத்தில் 'அது' எழுத்தின் திறமையாகவோ, பெருங்குறையாகவோ தோற்றமேற்படலாம். அதனாலொன்றும் பாதகமில்லை!
இதயத்துடிப்பின் பேச்சு
- Brand: சித்தார்த்தன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹110
Tags: idhayathudippin, pechu, இதயத்துடிப்பின், பேச்சு, சித்தார்த்தன், வானவில், புத்தகாலயம்