இந்த நூலில் உள்ள ஒவ்வொரு யோகப்பயிற்சியும் தேவை அறிந்து, திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டவை. இதன் அருமையை, தனித்துவத்தை ஈடுபாட்டோடு பயிற்சி செய்பவர்கள் உணர்வார்கள். இப்படியான அணுகுமுறை கிருஷ்ணமாச்சாரியார் யோக மரபின் பெரும் சிறப்புகளில் ஒன்று.
பல யோகா ஆசனங்கள் பற்றியும் அவை எப்படியெல்லாம் பயன் தருகின்றன என்பதையும் அறிய முடியும்; உற்சாகம் பெற முடியும்; உடலின் அருமையை தெரிந்து கொள்ள முடியும்.
தங்களின் உடல்- மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒவ்வொருவருக்கும் இந்த நூல் மிகவும் பிடித்தமான இருக்கும்.
நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள் இந்த நூலுக்கு பெரும் பங்களிப்பாய் இருக்கும். எளிதாக செய்யவும் - நிறைவாகப்பலன்கள் பெறவும் அவை உங்களுக்காக காத்திருக்கின்றன.
பயிற்சிகள்:
ஃபெண்களுக்கு
ஃமாணவர்களுக்கு
ஃஉடல் - மன அமைதிக்கு
ஃஉடல் வளைவுக்கு
ஃகால்களுக்கு
ஃகைகளை வலுவாக்குவதற்கு...என்று உள்ளன.
-------
ஏயெம்: யோகாவை முறையாகப்படித்து, பல யோகா நிபுணர்களின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று, கல்வி நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் யோக வகுப்புகள் நடத்தி - மாற்றங்களை ஏற்படுத்தி வருவதோடு, யோகா ஆசிரியர் உருவாக்கத்திலும் பங்கேற்று வருகிறார். பல பத்திரிகைகளிலும் பிபிசி உலகசேவையிலும் வேலை பார்த்துள்ள இவர், பல நூல்களின் ஆசிரியர். தற்போது முழு நேர யோகா ஆசிரியராக, 'யோகசக்தி' மையத்தை நடத்திவருகிறார். இது, இவரது நான்காவது யோகா நூல்.
Tags: idho, aruge, yoga, இதோ, அருகே, யோகா, ஏயெம், வானவில், புத்தகாலயம்