எதையாவது பெருசா சாதிக்கணும்! என்கிட்ட ஆர்வம் இருக்கு, ஆற்றல் இருக்கு ஆனா இலக்குதான் இல்ல! என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்?
அப்படியென்றால் வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான 24 புத்தகங்களை ஒரே நாளில் கரைத்துக் குடித்தவர் என்ற சாதனையுடன் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடங்கத் தயாரா?
நாணயம் விகடன் இதழில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய புத்தக மதிப்புரைகளிலிருந்து, வேலை/ தொழில் சார்ந்த தனிமனித/ நிறுவன/ சமுதாய வெற்றி என்ற நோக்கை மையமாகக் கொண்ட 24 புத்தகங்களின் தொகுப்பே
இது சக்சஸ் மந்திரம் அல்ல என்கிற இந்த அசோகச் சக்கரம்.
தனது 25 ஆண்டுகால கார்பரேட் அனுபவத்தை பயன்படுத்தி மாணவன், தொழிலாளி, தொழில் முனைவோர், சேவை/ பொருள் சார்ந்த வேலை பார்ப்பவர், முதலாளி, முதலீட்டாளர் - இதில் எந்த படிநிலையில் உள்ளவராயினும் தன் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட பரஸ்பரம் நாம் எப்படி ஆயத்தமாக வேண்டும் என்ற படிப்பினையை 24 புத்தகங்களின் சாரம்சத்தில் உள்ளடக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அணில் கடித்த பழமாய் உங்களுக்கான வெற்றிக்கனியை அடையாளம்காண இந்நூல் பேருதவியாய் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை!
இது சக்சஸ் மந்திரம் அல்ல!
- Brand: சித்தார்த்தன் சுந்தரம்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹100
Tags: idhu, success, mandhiram, alla, இது, சக்சஸ், மந்திரம், அல்ல!, சித்தார்த்தன் சுந்தரம், Sixthsense, Publications