இளமைக் காலத்தை ஒரு பொன்னான காலம் என பெரியோர் பலர் கருதுகிறார்கள். தங்கள் வாலிப வயதில், தங்களுக்கிருந்த இளமைத் துடிப்பையும் துள்ளலையும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறார்கள். பெரிய பொறுப்புகள் ஏதுமின்றி சுதந்திரப் பறவைகளாய் பறந்து திரிந்த அக்காலத்தை, குதியும் கும்மாளமும் போட்ட அக்காலத்தை, எதிர்காலத்திற்கான மாபெரும் வாய்ப்புகள் தங்கள் முன் குவிந்து கிடந்த அக்காலத்தை அவர்கள் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள்.
2 இளைஞர்களான உங்களுக்கு வாலிபத்தைப் பற்றி வேறு விதமான அபிப்பிராயம் இருக்கலாம். பருவ வயதில் உணர்ச்சியிலும் உடலிலும் ஏற்படுகிற மாற்றங்களை சமாளிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். பள்ளியில், நண்பர்களின் தாங்க முடியாத தொல்லையை அனுபவித்து வரலாம். போதைப் பொருள், குடி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் சிக்கிக்கொள்ளாதிருக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கலாம். அதோடு, உங்களில் பலர் நடுநிலை வகிப்பு, விசுவாசம் போன்ற பல விஷயங்களில் விவாதங்களைக்கூட எதிர்ப்பட்டு வரலாம். ஆம், இளமைக் காலம் இம்சைகள் நிறைந்த காலமாக இருக்கலாம். என்றாலும், ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கிற காலமாகவே அது இருக்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், அந்த வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?
இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை - Ilaingergaluku Oor Varthai
- Brand: சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: ilaingergaluku, oor, varthai, இளைஞர்களுக்கு, ஓர், வார்த்தை, -, Ilaingergaluku, Oor, Varthai, சுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா, கண்ணதாசன், பதிப்பகம்