நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.அணுகுண்டு எப்படி உருவாக்கப்படுகிறது? எப்படி இயக்கப்படுகிறது? தற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது? தீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா? வல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என மூன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன? இனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா?இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
Tags: , Balajayaraman, அணுகுண்டின், அரசியல், வரலாறு