இதுவரை வரலாற்றை இரு பெயர்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். கிறிஸ்து. பிறகு, திருவள்ளுவர்.மதிப்பெண்கள் பெறுவதற்காக மனனம் செய்ததைத் தாண்டி திருக்குறளை எப்போது கடைசியாக வாசித்திருக்கிறோம்? மனப்பாடச் செய்யுளாக நமக்கு அறியப்பட்டது குறளின் குற்றம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதைப் பழசாக நினைத்து பரணில் ஏற்றுவதும் சரியல்ல. இன்றைய கணினி யுகத்துக்குப் பொருத்தமான பல குறள்கள் திருக்குறளில் உள்ளன. அதேபோல, நாளை ரோபோ யுகம் வருகிறபோது அதற்கும் திருக்குறள் பொருத்தமாகவே இருக்கும். திருக்குறள் என்பது இரண்டு அடியில் சொல்லி முடிப்பது மட்டுமில்லை. வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் தேவையான ஓர் ஆசான். புதிதாக பிஸினஸ் ஆரம்பிப்பது, நண்பனுடன் நட்புறவோடு இருப்பது, காதலை வெளிப்படுத்துவது, நல்ல இல்லற வாழ்க்கை வாழ்வது, வாழ்வில் உச்சத்தைத் தொடுவது என எதற்கு வேண்டுமானாலும் திருக்குறளைத் திறந்து பார்த்தால் அதற்கு சில ஆலோசனைகளும் வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கும். திருக்குறள், எத்தகைய வாழ்வியல் நூல் என்பது இந்நூலின் வாயிலாக மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. திருக்குறள் எப்படிப் பொக்கிஷ-மோ அதுபோல இந்த நூலும் ஒரு வரப்பிரசாதமே.
Tags: , K.G.Jawarlal, திருக்குறள், வழியில், உருப்படு