• திராவிட இயக்க வரலாறு – இரண்டாம் பாகம்
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது.திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார்.ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது.அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திராவிட இயக்க வரலாறு – இரண்டாம் பாகம்

  • ₹360


Tags: , ஆர். முத்துக்குமார், திராவிட, இயக்க, வரலாறு, , இரண்டாம், பாகம்