குழந்தைகள்

Grid View:
Quickview

உஷ் குழந்தைங்க பேசுறாங்க

(0)
₹ 80

Description: “நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆகவேண்டும் என நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால் நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்...

Quickview

ஊஞ்சல் தாத்தா

(0)
₹ 30

Description: ஒரு பெரிய பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரேயொரு பூங்காதான் கதை களமாக அமைகிறது. அந்த பூங்காவில் ஓடியாடித் திரியும் மழலைகளைச் சுற்றியே கதை நகர்கிறது. அன்பு, அறம், பரிவு, பிரிவு, பிறர் நலம், பகிர்ந்து உண்ணுதல், குழந்தைமை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து – இக்கதை சுவைப்பட வழங்கப்பட்டுள்ளது. பாலைவன வெண்மணலில் நம் பாதங்களை பதிப்போமா,..

Quickview

ஊருக்குள் சிறுத்தை | கொ.மா.கோதண்டம் | விலை – ரூ. 60/-

(0)
₹ 60

Description: வன விலங்குகளின் வாழ்க்கையை, பறவை மொழிகளை நன்கு அறிந்த மலைவாழ் மக்களுடன் பழகியத்ன் விளைவாக பிறந்த கதைகள் இவை...

Quickview
Quickview

எங்கே செல்கிறது இந்தியா

(0)
₹ 350

இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒரு பகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக் கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை. அதனால், அருகி..

Quickview

எட்டுக்கால் குதிரை

(0)
₹ 45

மொழியின் உருவச்சிதைவோ,உருவப்பெருக்கமோ குழந்தைகளுக்கு அதீத கற்பனைகளைத் தரும்.அவற்றின் மீது மனித சுபாவங்களை ஏற்றி வேடிக்கை பார்ப்பதும் மகிழ்வதும்,சில பாடங்களைக் கற்றுக் கொள்வதுமாக கொ.மா.கோ.இளங்கோ இந்நூலை வடிவமைத்திருக்கிறார்...

Quickview

எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்

(0)
₹ 150

‘தமிழில் புதிய சிந்தனைப்போக்கிற்கான தேடல் அதிகரித்திருக்கிற காலம் இது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என்று தகவல்கள் கணந்தோறும் பறந்து, உதிர்ந்து விழுகின்றன. இந்நிலையில் நாம் அந்த உதிர்த்தலோடு நிதானமாக பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பொதுவாக ஆய்வில் நிதானமும், கவனமும், விரிவும், ஆழமும் தேவை. அதனை நோக்கியே என் எழுத்துப் பயணம் தொடர்கிறது. குறிப்பாக..

Quickview

எண்களின் கதை

(0)
₹ 50

Description: “ஜைர் நதிக்கரையில் கண்டு எடுக்கப்பட்ட இந்த சுமார்20,000ஆயிரம் ஆண்டு பழமையான எலும்பில் மூன்று வரிசை வெட்டுக் கோடுகள் உள்ளன.இந்தக் கோடுகளில் ஒழுங்கும் பாங்கும் தொகுப்பும் தெரிகிறது.எண்களின் வரலாறு,வளர்ச்சி குறித்து விவரிக்கிறது இந்நூல்”..

Quickview

எனது இளமை காலங்கள்பிடல் காஸ்ட்ரோ

(0)
₹ 110

பிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர்.கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தான் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர்.இளமையிலும்,மாணவப் பருவங்க்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிக்கர ஈடுபாட்டின் நினைவுகள்ஹவானா பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போதே ஆயுதப் போராட்டத்தைக் காற்றுக்கொண்டது,மேலும்,லத்தின் அமெரிக்காவில் அகில உல..

Quickview

எனது நீலப் புவி கோளம்

(0)
₹ 160

“இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார்.மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். ……..“கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு ஸ்தெப்பி வெளி நெடுகிலும் அதிர்ந்து ஒலித்தது...

Quickview

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா

(0)
₹ 70

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி.பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும்,அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும்,பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான மெல்லிய நகைச் சுவையோடும்,ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத..

Quickview

என்ன படிக்கலாம் புதியன விரும்பு

(0)
₹ 200

தலை நிறையக் கனவுகளுடன் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி, ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பதுதான். கல்லூரிப் படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், முக்கிய கல்வி நிறுவனங்கள், அட்மிஷன் விதிமுறைகள், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள்…படித்துப் பயன்பெற பல்வேறு முக்கியமான தகவல்களுடன் மாணவர்களுக்கு வழி..

Quickview

என்னுடைய காக்கா

(0)
₹ 35

காக்கா வீடு கட்டும் அழகும், ஒரு காக்காவிற்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லா காக்காவும் ஒன்றுசேரும் காக்காவுக்கு தன் குஞ்சு பெண் குஞ்சு அல்லவா..

Quickview

என்னுடைய நண்பர்கள்

(0)
₹ 25

“குட்டிப்பூனை, கருப்பிக்காக்கா,பூ வால் கன்றுக்குட்டி, முல்லைக்கொடி, பூ வால் அணில், குட்டி வண்ணத்துப்பூச்சி இப்படி இப்படி எத்தனை நண்பர்கள் நம்மைச் சுற்றிலும்! அவர்களில் சிலரை நீங்களும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்……”..

Quickview

எப்படி வந்தேன் தெரியுமா?

(0)
₹ 40

தாளில் கருத்துகளை வடிக்கும் பேனாவின் வருகை, மூக்குக் கண்ணாடி கண்களின் பார்வைக்குறையை எப்படி சரி செய்கிறது, தவறாக எழுதினால் திருத்த உதவும் ரப்பரின் உருவாக்கம்… இப்படியாக சைக்கிள் வரை 15 சாதனங்கள், எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல், தொழில் நுட்ப உண்மைகளின் ஊர்வலமே இந்நூல். ‘சுட்டி விகடன்’ இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வா..

Showing 91 to 105 of 424 (29 Pages)
Back to top