விகடன் பிரசுரம்

Grid View:
Quickview

இந்திய வானம்

(0)
₹ 200

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமா..

Quickview

இந்தியா கையேடு

(0)
₹ 270

ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பத..

Quickview

இன்னா நாற்பது இனியவை நாற்பது-Enna narpathu eniyavai narpathu

(0)
₹ 190

நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் சூழல் சிறுவர்கள் உள்பட அனைவரையும் நோயாளிகளாக மாற்றி..

Quickview

இப்படிக்கு வயிறு

(0)
₹ 120

விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்க..

Quickview

இமயகுருவுடன் ஓர் இதயப்பயணம்-Emaiyaguruvudan ore ethaiyappayanam

(0)
₹ 220

மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல புதிரானதும்கூட... இமயமலை அடிவாரம் எங்கும் பல சித்தர்களும் யோகிகளும் ஆதிமுதல் இன்றுவரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இமயமே அவர்களின் இறை உலகம். இந்துக்கள் மட்டுமல்லர், வேற்று மதங்களைச் சார்ந்தோரும் அமைதியை நாடி இமயமலைக்குச் செல்கின்றனர். அந்த இடத்தின் ஈர்ப்பு அப்படி. அந்த இடத்தில் இருந்துதான், மலேசியாவில் பர..

Quickview

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை

(0)
₹ 135

இனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே..

Quickview

இருமுடிச் சோழன் உலா

(0)
₹ 385

`சுங்கம் தவிர்த்த சோழன்' என வரலாறு சொல்லும் முதலாம் குலோத்துங்கச் சோழன், சாளுக்கிய ராஜேந்திரனாக இருந்து அநபாயச் சோழனாக ஆனவன். சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோழ மரபைத் தூக்கி நிறுத்தியவன் இவன்தான். இந்தக் குலோத்துங்கச் சோழனின் இளமைக் கால சம்பவங்களைக் கொண்டு புனையப்பட்ட வரலாற்று நாவல் இது. மாமன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் ஏற்பட்ட சோழ - சாளுக்கிய த..

Quickview

இவன்தான் பாலா

(0)
₹ 150

இதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை சொல்கிற நேர்த்தி ரசிக்கும்படியானது. ஏதோ ஒரு கிராமத்திலிருந்..

Quickview

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்

(0)
₹ 220

இந்திய மண்ணில் உருவான பழமையான மருத்துவ முறை ஆயுர்வேதம். நமது பாரம்பரியத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தது இது. நோய் என்பது உடல் பாதிப்பால் மட்டும் வருவதில்லை எனக் கருதும் ஆயுர்வேத வைத்தியர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மிகத் தன்மைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்து சிகிச்சை தருகிறார்கள். இந்த நோய்க்கு இன்ன மருந்தைக் கொடுங்கள் என்று சிம்பிளாகச் சொல்லி..

Quickview

உனக்காகவே ஒரு ரகசியம்

(0)
₹ 225

உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவிடுகிறது. இத்தகைய சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு அவன..

Quickview

உன்னோடு ஒரு நிமிஷம்

(0)
₹ 150

சிறுவர்கள் என்றாலே குறும்பும், துடிப்பும், துடுக்குத்தனமும் இல்லாமல் இருக்காது. இளம் ரத்தம், முறுக்கேறும் தேகம், வேகமான மூளைச் செயல்பாடு என்று அந்த வயதுக்கே உரிய எல்லா வளர்ச்சிகளும் நடந்துகொண்டு இருப்பதால் அவற்றைத் தடுக்கமுடியாது. ஆனால், இந்தத் துடிப்பையும் துடுக்குத் தனத்தையும் திசை திருப்பிச் சரிப்படுத்த முடியும்; சீர்ப்படுத்த முடியும். பிள்ளைகளை..

Quickview

உயிர்

(0)
₹ 210

உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான். அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்_சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர். உடலின் கூடலில் இன்..

Quickview

உயிர் பிழை

(0)
₹ 165

புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். இந்த நோய்க்கு தற்காலிக சிகிச்சை பெற்று உலகில் உயிர் வாழ்வோர் எண்ணிக்கை எண்ணிலடங்கா. இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. மனித இனத்தை அச்சுறுத..

Quickview

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும்

(0)
₹ 130

கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை ப..

Quickview

உருள் பெருந்தேர்

(0)
₹ 130

படைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் தாமிரபரணிக் கரைகளை மனதால் தழுவிச் செல்கின்றன கலாப்ரியாவின் வரிகள..

Showing 46 to 60 of 276 (19 Pages)
Back to top