காலச்சுவடு பதிப்பகம்

Shop all the Collection of books offered by Kalachuvadu Pathipagam
Grid View:
Quickview

1945இல் இப்படியெல்லாம் இருந்தது - 1945 Il Ippadiyellam Irunthathu

₹ 150

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் அசோகமித்திரன் தன்னுடைய படைப்பு மூலம் காலத்தைப் பின்னுக்குத் தள்ளிகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் எழுதிய கதைகளும் இன்று எழுதும் கதைகளும் அவை எழுதப்பட்ட காலத்தை உதறிச் சமகாலத்தவையாகவே நிலைபெறுகின்றன. வாழ்க்கையின் அபத்தத்தையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் கருணையுடனும் எள்ளல் மிளிரும் நடையில் வெள..

Quickview

1958 - 1958

₹ 200

1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம்  சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது...

Quickview

Wild Girls, Wicked Words - Wild Girls Wicked Words

₹ 350

In 2003, a group of men and women, setting themselves up as guardians of Tamil culture, objected publicly to the language of a new generation of women poets charging the women with obscenity and immodesty. This masterclass of contemporary Tamil poetry is twice born in translation. The distinct women's voices find their feminine awakening to the rhy..

Quickview

ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் - Frenchiyar Aatchiyil Puducherry Naadum Panpaadum

₹ 360

பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள..

Quickview

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815) - Frenchiyar Kaala Puducherry Mannum Makkalum

₹ 390

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அயலகத்தில் வணிக முயற்சிகள், அதன் தொடர்ச்சியாகக் காலனிகளில் ஆதிக்கத்தை நிறுவுதல், ஊடாகக் கத்தோலிக்க மறை வழியில் கிறித்தவம் பரப்புதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களுடன் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தது. இந்தியச் சிற்றரசர்..

Quickview

அகவிழி திறந்து - Agavizhi Thiranthu

₹ 100

பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கண்ணன் சுவையான மொழியில் எழுதிய பத்திகளின் தொகுப்பு ‘அகவிழி திறந்து’. 2007 2010இல் காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை இவை. கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை, உண்மைத் தேட்டம், மொழி நவீனம் ஆகியவற்றோடு சுவை மிகுந்த சொல் முறையும் அக..

Quickview

அகாலம் (காலச்சுவடு) - Akaalam Kalachuvadu

₹ 175

சமூக இருப்பில் மனிதர்கள் உணரும் அழுத்தங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் அமைப்பாகக் குடும்பங்கள் இருக்கின்றன. அதே சூழலில் அவ்வமைப்பின் பரப்பில் விதிகளை ஒட்டியும் வெட்டியும் நிகழும் மென்னுணர்வுகள், வன்னுணர்வுகளின் ஆட்டத்தையே செந்திலின் கதைகளுக்குள் பார்க்கிறோம். கட்டற்ற காதலின் பரிதவிப்பு, மீறிப் பெருகும் காமத்தின் பித்துநிலை, கருணையற்று நிகழ்த்த..

Quickview

அக்கரைச் சீமையில் - Akkarai Seemaiyil

₹ 175

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொ..

Quickview

அக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் - Akkaa Kannada Pen Ezhuththaalargalin Sirukathaigal

₹ 225

கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள்...

Quickview

அக்கிராகாரத்தில் பெரியார் - Agrahaaraththil Periyaar

₹ 275

பி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்பு ரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன...

Quickview

அக்னியும் மழையும் - Agniyum Mazhaiyum

₹ 490

சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும்  பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் சமகால அர..

Quickview

அசகவதாளம் - Asakavathaalam

₹ 100

இன்று வாழ்வை முழுநேரமும். வியப்புகளையும் நெகிழ்வான, குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கும் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, இன்னும் சில இடங..

Quickview

அசாதாரண மனிதன் - Asaathaarana Manithan

₹ 50

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்துவரும் சச்சி தானந்தன் சுகிர்தராஜா எழுதிய இந்த எட்டுக் கதைகளும் 1980களின் நடுப்பகுதியில் ‘கணையாழி’யில் வெளிவந்தவை. ஏழு கதைகள் இங்கிலாந்தையும் ஒரு கதை இலங்கையையும் பின்புலமாகக்கொண்டவை. பெரும்பாலான கதை மாந்தர்களும் வேறு கலாசாரங்களைச் சார்ந்தவர்கள். அவ் வகையில் தமிழகச் சூழலில் வித்தியாசமான சிறுகதைகள் இ..

Quickview

அசோகமித்திரன் குறுநாவல்கள் - Asokamithran Kururnavalkal

₹ 675

கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன்...

Quickview

அசோகமித்திரன் சிறுகதைகள் - Asokamithran Sirukadhaigal

₹ 1,750

தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு...

Showing 1 to 15 of 938 (63 Pages)
Back to top