காலச்சுவடு பதிப்பகம்

Shop all the Collection of books offered by Kalachuvadu Pathipagam
Grid View:
Quickview

அஞ்சனக்கண்ணி

(0)
₹ 125

‘கவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன.’..

Quickview

அஞ்சும் மல்லிகை

(0)
₹ 140

கன்னட நாடக ஆசிரியரான கிரீஷ் கார்னாட் சமூகப்பின்னணியில் எழுதிய நாடகங்களில் ‘அஞ்சும் மல்லிகை’ மிக முக்கியமானது. அஞ்சும் மல்லிகைகளாக வெளிநாட்டுக்குச் சென்ற அக்காலத்து இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும் கனவுகளையும் இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக முன்வைக்கிறது நாடகப்பிரதி. ஒருபுறம் நிறவேற்றுமையால் உருவாகும் கசப்புகளுக்கும் தடுமாற்றங்கள..

Quickview

அஞ்சுவண்ணம் தெரு (காலச்சுவடு)

(0)
₹ 300

உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழைமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப்போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார்...

Quickview

அடி

(0)
₹ 125

ஆண்-பெண் விழைவின் தீராப் புதிர்களை, மாளாத் தவிப்பை, அறியவியலா மர்மங்களையே தி. ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார். மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார். அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது. இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் ப..

Quickview

அடியும் முடியும்

(0)
₹ 275

இறைவனின் அடியும் மூடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப்பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி...

Quickview

அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை

(0)
₹ 90

அக்பர் க்க்கட்டில் எழுதிய ‘வரூ, அடூரிலேக்கு போகாம்’ என்னும் மலையாள நூலின் தமிழாக்கம் இது. இந்தியாவின் முதன்மையான திரைக் கலைஞர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனின் இளமைக்கால அடூர் வாழ்க்கை,  குடும்ப உறவினர்கள், கடந்துவந்த வாழ்க்கைப் பாதை, திரையுலக அனுபவங்கள், தனது திரைப்படங்கள், சக கலைஞர்கள், இலக்கியவாதிகள் குறித்த அபிப்ராயங்கள் மற்றும் வாழ்க்கை குற..

Quickview

அணுசக்தி அரசியல்

(0)
₹ 95

அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த ப்ரபாதம் (இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரைகளுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர..

Quickview

அண்ணல் அடிச்சுவட்டில்

(0)
₹ 250

1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் ஒரு தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் - மகாத்மா காந்தியின் வாழ்க்கையை 'டாகுமெண்டரி' படம் எடுக்கவேண்டுமென்று. இரண்டரை ஆண்டுகள். இரு முறை உலகைச் சுற்றினார். ஒரு லட்சம் மைல் பயணம். முப்பது ஆண்டுகளில், நூறு காமிரக்காரர்கள் படம்பிடித்த 50,000 அடி நீளப் படங்களைக் கண்டெடுத்தார். 1940இல் படம் வெளி..

Quickview

அதிகாரத்தின் வாசனை

(0)
₹ 75

கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். ஆ.ராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம். ராசாவை ஊழலுக்குத் தூண்டிவிட்டு அவரது சாதி அடையா..

Quickview

அந்த நேரத்து நதியில்...

(0)
₹ 175

வாசிப்பு என்பது ஒரு 'அந்தரங்கமான அனுபவம்' என்பதிலிருந்து 'அரசியல் செயல்பாடு' என்பதுவரை பலவிதமான கருதுகோள்கள் இலக்கிய விமர்சனத்தில் இருக்கின்றன. அவையெல்லாமே படைப்பை அணுக ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே உதவக் கூடும். அதன்பிறகு வாசகன் தனியாகவே பயணிக்க வேண்டும். அவ்வகையில், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளினின்றும் தான் பெற்ற வாசிப்பனுபவ..

Quickview

அந்தக் காலத்தில் காப்பி இல்லை

(0)
₹ 225

நவீனத் தமிழக உருவாக்கத்தின் பின்புலத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஆராயும் கட்டுரைகள் இவை. தற்காலத்தைப் புரிந்துகொள்வதற்குக் கடந்தகாலத்தை விமர்சன நோக்கோடு பார்க்கவேண்டும் என்பதை வற்புறுத்தும் பார்வை இவற்றின் ஊடுசரடு. காப்பியும் புகையிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட முறை; திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த அரசியல்; பாரதியின் எழுத்து ..

Quickview

அந்தக் காலம் மலையேறிப் போனது

(0)
₹ 90

கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . ...

Quickview

அந்தரத்தில் பறக்கும் கொடி

(0)
₹ 225

இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டு..

Quickview

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு

(0)
₹ 140

பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து  நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த  அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் க..

Quickview

அனந்தியின் டயறி

(0)
₹ 225

நான் வாழும்  பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்ணில் விழுவதுபோன்றே நான் பதிவுசெய்திருக்க..

Showing 16 to 30 of 907 (61 Pages)
Back to top