காலச்சுவடு பதிப்பகம்

Shop all the Collection of books offered by Kalachuvadu Pathipagam
Grid View:
Quickview

அம்மா ஒரு கொலை செய்தாள்

(0)
₹ 325

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர்.  பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை...

Quickview

அம்மா வந்தாள்

(3)
₹ 225

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகள..

Quickview

அம்மாவின் ரகசியம்

(0)
₹ 55

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவ..

Quickview

அயோத்திதாசர்: வாழும் பெளத்தம்

(0)
₹ 225

ஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில்  மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது...

Quickview

அரபிக் கடலோரம்

(0)
₹ 70

மலையாள எழுத்தாளர் சக்கரியா ‘காலச்சுவ’டில் எழுதிய பத்தியின் தொகுப்பு. மலையாளச் சமூகம் பற்றிய மோகம் தமிழரிடம் உண்டு. இதன் மறுபகுதி தமிழ்ச் சமூகம் பற்றிய தாழ்வு மனப்பான்மை. இந்த மோகத்திலும் தாழ்வுமனப்பான்மையிலும் விடுபட்டுப்போனவற்றைக் கவனப்படுத்துகின்றன இக்கட்டுரைகள். இவற்றோடு நாம் கொள்ளும் கருத்து முரண்பாடுகளையும் தாண்டி ஒரு அறிவுஜீவியின் சுதந்..

Quickview

அருகில் வந்த கடல்

(0)
₹ 115

மு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாதவர்கள். தப்புவதற்கான வழியோ முனைப்போ அற்றவர்கள். தம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட கழிவுகளையும் துர்நாற்றங்களையும் உண்டு வாழும் அற்பமான உயிர்கள்...

Quickview

அரூப நெருப்பு

(0)
₹ 135

எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு. வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும..

Quickview

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

(0)
₹ 175

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது...

Quickview

அர்ச்சுனன் தபசு

(0)
₹ 500

உலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத் தொகுதி. அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதியில் இடம்பெறும் எல்லாக் கலைக் கூறுகளையும் ஆராய்கிறது இந்நூல். தவமியற்றுவது அர்ச்சுனனா, பகீரதனா? அதன் களம் இமயமா, கைலாயமா? தவம் நிகழ்வது எந்தக் காலத்தில்? எந்தப்..

Quickview

அர்த்தநாரி

(0)
₹ 200

‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ என்று இப்போது தோன்றுகின்றது. இனிமேல் இப்படி ஒரு மனநிலை என் வாழ்நாளில் வாய்க்கவே பெறாது என்றுதான் நினைக்கிறேன். ஆகவே அரிதினும் அரிதான சந்தர்ப்..

Quickview

அறபும் தமிழும்

(0)
₹ 120

பிற மொழிகளுடன் தமிழ் மொழி கொண்ட மொழியியல் உறவு விரிவாக ஆராயத்தக்க ஒன்று...

Quickview

அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்

(0)
₹ 75

நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல்...

Quickview

அறியப்படாத தமிழகம்

(0)
₹ 150

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு ..

Quickview

அறியப்படாத தமிழகம் (விலையடக்கப் பதிப்பு)

(0)
₹ 75

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு ..

Quickview

அறியப்படாத தீவின் கதை

(0)
₹ 75

தன் நிழலின் அருகில் இன்னொரு நிழலைக் கண்டான். அவன் விழித்துக்கொண்டு, தன் கைகள் சுத்தம் செய்யும் பெண்ணை அணைத்திருப்பதையும், அவள் கைகள் தன்னை அணைத்திருப்பதையும் . . .  இது கப்பலின் துறைமுகப் பக்கம், இது அதன் கடல்பக்கம் என்று யாராலும் சொல்ல முடியாதபடி, ஒன்றென இணைந்து இருப்பதைத் தெரிந்துகொண்டான் . . . ஏறக்குறைய நடுப்பகல் நேரத்தில், கடலின் எழும்புதலோடு, ..

Showing 46 to 60 of 907 (61 Pages)
Back to top