வாசகசாலை

Shop all the Collection of books offered by Vasagasaalai
Grid View:
Quickview
Quickview

ஆடுகளம்: அரசியல், அழகியல், ஆன்மிகம் - Aadukalam Arasiyal Azhagiyal Aanmeegam

₹ 200

கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் ஆட்ட நுட்பத்துடன் கள வியூகங்களையும் ஆட்டத்தின் உளவியல் கூறுகளையும் ஆளுமை அலசல்களையும் இணைத்து எழுதும் பாணியில் தினேஷ் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறார். துறைசார் அறிவு, நுட்பமான பார்வை, தர்க்கப்பூர்வமான அலசல் ஆகியவற்றுடன் படைப்பூக்கத்துடன் கிரிக்கெட் குறித்து தமிழில் எழுதி வரும் மிகச் சிலரில் தினேஷ் ஒருவர். இத்தகைய எழ..

Quickview

இனி ஒருபோதும் கடவுளிடம் பேச மாட்டேன் - Ini Orupodhum Kadavulidam Pesa Maaten

₹ 130

மஞ்சுளாதேவியின் இந்தத் தொகுப்பில், பன்னிரண்டு ஞானி நினைவாஞ்சலிக் கவிதைகள் தவிர மீதி எல்லாமே கொரானாவால் சிதைபட்ட வாழ்வை சொல்ல வந்திருக்கின்றன. மேற்கூறிய படி இவரது எல்லாக் கவிதைகளும் உணர்வின் தளத்தில் புனையப்பட்டவை. அன்றாட நிகழ்வுகளே கவிதையாகி இருக்கின்றன. கொரானா காலத்தில் இவர் எதுவும் தின்பண்டம் வாங்கிச் செல்லாத வீட்டின் ஏமாந்த குழந்தையில் இருந்து, ..

Quickview

உபரி சாத்தான்களுக்கு அப்பால் - Ubari Saathaangalukku Appaal

₹ 125

ஒரு பெண்ணின் தனிமை, நிராகரிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றம், துரோகம், துக்கம், இயலாமை, வலி இப்படி எல்லா உணர்ச்சியையும் எண்ணங்களையும் நேரிடையாகச் சொல்லிச் செல்லாமல் அதை ஒரு தாயத்து போல் படிம மொழியாக்கி அதில் மந்திரத் தகடு போல் கவிதைகளைச் சுருட்டிவைத்து குறியீடுகளைக் கயிறெனக் கோத்துக் கட்டுகிறார். எழுதியதும் அதைக் கடந்து விட்ட திருப்தியில் படிம தாயத்தை த..

Quickview

எட்டு நாய்க்குட்டிகள் - Ettu Naaikkuttigal

₹ 80

கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும். இப்போது முப்ப..

Quickview

கசவாளி காவியம் - Kasavaali Kaviyam

₹ 280

ரொம்ப ரிலாக்சா படிக்கலாம்.. ஈசாக் அய்யப்பன்.. சூசை முருகன்.. பேரு படிச்சப்பவே லேசான சிரிப்பு ஆரம்பமாச்சு.. கதையோட ஹீரோ சூசை.. 23 வயசுல காலேஜ் போறாரு.. எங்கெங்கயோ அலைஞ்சு கடைசியா ஒரு காலேஜ்ல viscom படிக்கிறாரு.. தலைவரோட அலும்பு.. அட்டகாசம்.. இதெல்லாம் தான் கதை.. முதல் அத்தியாயத்திலயே சிரிப்பு ஆரம்பமாயிடுது.. மேனேஜ்மென்ட் அண்ட் கண்ட்ரோல் ஆஃப் ஸ்ட்ரே..

Quickview

கடல் - Kadal

₹ 200

கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாய..

Quickview

கடவுளே என்கிறான் கடவுள்! - Kadavule Engiraan Kadavul

₹ 275

குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்ப்பம் தென்பட்டு விடுமெனில் அதனுள்ளே கலை பணிந்திருக..

Quickview

காடனும் வேடனும் - Kadanum Vedanum

₹ 60

எல்லோரும் கால்களால் நடக்க கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...

Quickview

காட்டுக் குயில் - Kaattu Kuyil

₹ 150

அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா… இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப்பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம். அவசரமில்லை, பொறுமையாக உன் ஆன்மாவின் ஆடையை அவிழ்த்துக் க..

Quickview

குருதியுறவு - Kuruthiyuravu

₹ 130

நீராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும் போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான். கரிசலில் பாரததேவியிடம் இந்த ஒழுங்கை நான் வெகு..

Quickview

சங்கிலி - Sangili

₹ 130

கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவதுண்டு...

Quickview

சற்றுத் திமிரானவளை எனக்குப் பிடித்துவிடுகிறது - Satru Thimiraanavalai Enakku Pidiththuvidugirathu

₹ 170

எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது...

Quickview

சிகரம் தொட்ட சினிமாக்கள் - Sigaram Thotta Cinemaakkal

₹ 150

பழைய திரைப்படங்களை ரசிப்பது, ஆராய்வது, எண்ணித் தோய்வது சிலருக்குப் பிடிக்கும். பாலகணேஷ் அப்படிப்பட்ட மனிதர். ஆனால் அவரது இந்த ரசனைக் குறிப்புகள் வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இன்னொரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. திரையுலகின் களப்பிரர் காலத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதன் பொற்காலம் எந்தக் காரணிகளால் தீர்மானம் செய்யப்பட்டது..

Showing 1 to 15 of 21 (2 Pages)
Back to top