• சுந்தர காண்டம்-Sundara Kaandam
காலத்தால் அழியாத காவியம் இராமாயணம். வெறும் கற்பனை தானே என்று அலட்சியம் செய்ய முடியாத அமரத்தன்மை அதில் உள்ளது. அது கருதியே அதனை நரர்க்கு வாய்த்த அமிழ்தம் என்று பாடினர். இந்தியனின் இதயத்திலும் இரத்தத்திலும் இராமன் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆண்களின் இலட்சியம் இராமன். பெண்களின் இலட்சியம் சீதை. பலரது வாழ்வுப் பாதையை வகுத்த வல்லமை ராம கதைக்கு உண்டு. இராமாயணம் நடந்த நிகழ்வுதான். அதில் காலத்தின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனையும் கண்டிப் பாகக் குடியேறி நடக்காத கற்பனையோ என்று தோன்ற வைக்கிறது. இராமாயணத்தை இலக்கியமாக அனுபவிக் கலாம். அதற்கு இதயம் வேண்டும். அரசியல் வரலாறாக அனுபவிக்கலாம். அதற்கு அறிவு வேண்டும். ஆன்மிக ஞான அனுபவமாகவும் இராமாயணத்தை உணரலாம். அதற்கு ஆத்மாவும் ஆன்மிக எண்ணமும் அவசியம். இந்த நூலை இதயத்தோடும், அறிவோடும், ஆத்மாவோடும் நான் அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தையே ஓர் எளிய இனிய நூலாக வழங்கு கிறேன். எனவே இலக்கிய வரலாற்று ஆன்மிக அனு பவம் சுந்தர காண்டத்தை ஊன்றிப் படிக்கும் ஒவ்வொரு வருக்கும் ஏற்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சுந்தர காண்டம்-Sundara Kaandam

  • ₹75


Tags: sundara, kaandam, சுந்தர, காண்டம்-Sundara, Kaandam, சுகி.சிவம், கவிதா, வெளியீடு