தமிழில்: ஜனனி ரமேஷ்India’s China War நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.இந்திய வரலாற்றில் இன்றுவரை சர்ச்சைக்குரிய ஆண்டாக 1962 நீடிக்கிறது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய சீனப்போர் ஏன் தொடங்கியது? ஏன் இந்தியர்களால் சீனாவை வெல்லமுடியவில்லை? இது நேருவின் தவறா?பிரிட்டிஷார் காலத்தில், குத்துமதிப்பாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்கோட்டை அதனிடமிருந்து விடுதலை பெற்ற இந்திய தேசம் அப்படியே பின்பற்றலாமா? வாருங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம் இது சீனாவின் நிலைப்பாடு.இந்திய சீன எல்லை காலாகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டது. எந்தப் பேச்சுவார்த்தைக்கும் மறு பரிசீலனைக்கும் இடம் இல்லை. இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.இந்தியா எந்த அடிப்படையில் அப்படிக் கறாராகச் சொன்னது? கைலாசம் என்பது இந்துக்களின் இந்தியர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த விஷயம் என்பது மட்டுமே இந்தியா உரிமை கோரும் பகுதிகளுக்கான நியாயத்தை வழங்கிடமுடியுமா? இந்தியத் தரப்பில் வேறு என்னென்ன நியாயங்கள் உண்டு?முதலாளித்துவ நாடுகள் மட்டுமல்லாமல் ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகளும் சீனாவை ஏன் எதிர்த்தன? தன்னைவிட பல மடங்கு ராணுவ பலமும் நிலவியல் சாதகங்களும் கொண்ட சீனாவை இந்தியா எந்த அடிப்படையில் எதிர்த்தது? சீனா போரில் ஈடுபடாது என்று எந்த தைரியத்தில் இந்திய வீரர்களை எல்லைப் பகுதியில் பணையம் வைத்து அனுப்பியது? இந்திய ராணுவத்துக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் இடையில் என்னென்ன வாக்குவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடந்தன? தி டைம்ஸ் இதழின் புது தில்லி நிருபராகப் பணியாற்றிய நெவில் மாக்ஸ்வெல் இந்தப் போரை அருகிலிருந்து ஆராய்ந்தவர். இந்திய சீனப் போரை நடுநிலையுடன் ஆராயும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரே நூல் இதுவே.
இந்திய சீனப் போர்-India Cheena Por
- Brand: நெவில் மாக்ஸ்வெல்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹350
Tags: , நெவில் மாக்ஸ்வெல், இந்திய, சீனப், போர்-India, Cheena, Por