இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் பற்றிய ஒரு பருந்துப் பார்வை. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சைய்யத் அகமது கான், முகம்மது இக்பால், முகம்மது அலி, பசுலுல் ஹக், முகம்மது அலி ஜின்னா, அபுல் கலாம் ஆசாத், லியாகத் அலி கான், ஜாகிர் ஹுசைன் ஆகிய எட்டு ஆளுமைகள் பற்றிய விரிவான சித்திரங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்தச் சித்திரங்களின் ஊடாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சமூகங்கள் குறித்த மிக விரிவான, மிக ஆழமான ஓர் அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. இந்தியப் பிரிவினை தவிர்க்கவியலாததா? அதற்கு யார் காரணம்? பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஓடிய ரத்த ஆற்றைத் தடுத்திருக்க முடியுமா? இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடுஅமைக்கவேண்டும் என்பதுதான் ஜின்னாவின் மெய்யான நோக்கமா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நல்லுறவு சாத்தியமா? இன்றும் பெரும் தாக்கம் செலுத்தும், பலத்த விவாதங்களைக் கிளப்பும் முக்கியக் கேள்விகளுக்கு ராஜ்மோகன் காந்தி விரிவான விடைகளை அளிக்கிறார். வரலாற்றிலிருந்து நாம் கற்கவேண்டிய சில முக்கியமான பாடங்களையும் அவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ராஜ்மோகன் காந்தியின் Understanding the Muslim Mind நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது,
India Muslim Thalaivargal /இந்திய முஸ்லிம் தலைவர்கள்
- Brand: Rajmohan Gandhi /ராஜ்மோகன் காந்தி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹750
Tags: , Rajmohan Gandhi /ராஜ்மோகன் காந்தி, India, Muslim, Thalaivargal, , /இந்திய, முஸ்லிம், தலைவர்கள்