மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்ட செயல்தான் ஆன்மிகத் தேடல்.
அன்பு, அறிவு, புகழ் என எத்தனையோ விதமான தேடல்கள்... அவற்றுக்கெல்லாம் ஆரம்பமாகவும் முடிவாகவும் திகழ்வதே 'நிம்மதி'. அதனை அடைய, மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏராளம்.
நிம்மதியைத் தேடி அலையும் மனிதனை, ஆன்மிகப் பாதையில் அழைத்துச் செல்ல, அந்தந்த காலக்கட்டத்தில் வழிகாட்டிகள் தோன்றி அன்போடு அரவணைத்துச் செல்வர். அந்த வரிசையில் சம காலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்மிக குருவாகத் திகழ்பவர் மாதா அமிர்தானந்தமயி தேவி. ''தான் எரிவதால் உலகுக்கு நறுமணம் தரும் ஊதுவத்தியைப் போல என் வாழ்க்கை இருக்க விரும்புகிறேன். இறுதிமூச்சு விடும்போதுகூட தோளில் ஒருவரை அரவணைத்து, ஆறுதல் கூறி, அவரது கண்ணீரைத் துடைக்க வேண்டுமென அம்மா விரும்புகிறேன்'' என்று மாதா அமிர்தானந்தமயி தேவி எப்போதும் சொல்வார்.
தம்மை நாடி வருபவர்களின் வாழ்வை அர்த்தம் நிறைந்ததாக்குவதையே தன் நோக்கமாகக் கருதி, ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வரும் மாதா, வாழ்க்கையின் குறிக்கோளையும், நிம்மதியை அடையும் வழிமுறைகளையும் 'சக்தி விகடன்' வாசகர்களுக்கு தொடராக அருளினார்.
'அம்மாவின் தரிசனத்தையும் அருளுரையையும் ஒருங்கே பெற வேண்டும்' என்ற வாசகர்களின் அவா, 'இங்கே நிம்மதி!' உருவாகக் காரணமானது என்றால் அது மிகையாகாது.
படித்துணர்ந்து செயல்படுங்கள், ஆனந்தமயமான நிம்மதியை அனுபவியுங்கள்!
இங்கே நிம்மதி
- Brand: மாதா அமிர்தானந்த மயி தேவி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹55
-
₹47
Tags: inge, nimmathi, இங்கே, நிம்மதி, மாதா அமிர்தானந்த மயி தேவி, விகடன், பிரசுரம்